தர்ஷன் நடித்துள்ள ‘சரண்டர்’ படத்தின் டிரெய்லர் வெளியானது

சென்னை,
அப்பிட் பிக்சர்ஸ் நிறுவனம் தனது முதல் பிரமாண்ட படைப்பாக சரண்டர் திரைப்படத்தை பெருமையுடன் வழங்க இருக்கிறது. கிரைம்-ஆக்சன் திரில்லராகவும் உணர்வுப் பூர்வமாகவும் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ் சினிமாவில் முற்றிலும் புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தினை விக்டர் குமார் தயாரித்துள்ளார். தர்ஷன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தினை அறிமுக இயக்குனர் கவுதமன் கணபதி இயக்கியுள்ளார். இவர் பிரபல இயக்குநர் அறிவழகன் உடன் துணை இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் தர்ஷன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில், லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், பதினே குமார் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற ஆகஸ்ட் 1ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தநிலையில், ‘சரண்டர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.