மிகவும் விரும்பத்தகுந்த தேசம் பட்டியலில் இந்தியாவை நீக்கிய பிரபல ஐரோப்பிய நாடு

மிகவும் விரும்பத்தகுந்த தேசம் பட்டியலில் இந்தியாவை நீக்கிய பிரபல ஐரோப்பிய நாடு


நெஸ்லே வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஒருதலைப்பட்சமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

தாக்கத்தை ஏற்படுத்தும்

இதுநாள் வரையில் இந்தியாவுக்கு அளித்து வந்த மிகவும் விரும்பத்தகுந்த தேசம் அந்தஸ்த்தை சுவிஸ் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

மிகவும் விரும்பத்தகுந்த தேசம் பட்டியலில் இந்தியாவை நீக்கிய பிரபல ஐரோப்பிய நாடு | Swiss Indias Most Favoured Nation Status

சுவிட்சர்லாந்தின் இந்த அதிரடி முடிவு இருதரப்பு ஒப்பந்தங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் சுவிட்சர்லாந்தில் செயல்படும் இந்திய நிறுவனங்கள் மற்றும் இந்தியாவில் சுவிஸ் முதலீடுகள் மீதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே அஞ்சப்படுகிறது.


டிசம்பர் 11 அன்று, சுவிஸ் நிதித் துறை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தைக் குறிப்பிட்டு இந்தியாவுக்கான விரும்பத்தகுந்த தேசம் அந்தஸ்தை அகற்றுவதற்கான அதன் முடிவிற்கு 2023 தீர்ப்பைக் காரணம் காட்டியது.

மேலும், OECDயில் ஒரு நாடு இணையும் போது, ​​இரு நாடுகளுக்கும் இடையேயான விரும்பத்தகுந்த தேசம் என்ற விதி தானாகப் பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

குறிப்பாக இந்திய அரசாங்கம் அந்த குழுவில் சேர்வதற்கு முன்பு அந்நாட்டுடன் ஏற்கனவே வரி ஒப்பந்தம் செய்திருக்கும் என்றால். OECD என்பது 1961 ல் உருவாக்கப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பாகும்.

நெஸ்லே வழக்கில்

இதன் தலைமையகம் பாரிஸில் செயல்படுகிறது. இந்த அமைப்பானது கொள்கை வகுப்பாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் குடிமக்களுடன் நெருக்கமாகச் செயல்பட்டு, சான்று அடிப்படையிலான சர்வதேச தரங்களை நிறுவுவதற்கும், சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வு காணவும் செயல்பட்டு வருகிறது.

மிகவும் விரும்பத்தகுந்த தேசம் பட்டியலில் இந்தியாவை நீக்கிய பிரபல ஐரோப்பிய நாடு | Swiss Indias Most Favoured Nation Status

OECD நாடுகளுக்கு வழங்கிய வரி விகிதங்களை விட சில வகையான வருமானங்கள் மீதான வரி விகிதங்கள் குறைவாக இருந்ததன் அடிப்படையில் லிதுவேனியா மற்றும் கொலம்பியாவுடன் வரி ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டது.

இந்த இரு நாடுகளும் பின்னர் OECDயில் இணைந்தன. இந்த நிலையில் கொலம்பியாவும் லிதுவேனியாவும் OECDயில் இணைவதால், இந்தியா-சுவிட்சர்லாந்து வரி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 10 சதவீதத்திற்குப் பதிலாக, விரும்பத்தகுந்த தேசம் அந்தஸ்தின் கீழ் 5 சதவீத ஈவுத்தொகை மட்டுமே பொருந்தும் என்று சுவிட்சர்லாந்து கருதியுள்ளது.

ஆனால் அது பொருந்தாது என்றே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்தே இந்தியாவுக்கு எதிராக சுவிஸ் நிர்வாகம் அதிரடி முடிவெடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *