பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி – நடிகர் ரஜினிகாந்த் | Thank you to everyone who wished me on my birthday

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி – நடிகர் ரஜினிகாந்த் | Thank you to everyone who wished me on my birthday


சென்னை,

ரஜினிகாந்த் நேற்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும் திரைபிரபலங்களும் அவர்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு கூலி திரைப்படத்திலிருந்து ஒரு பாடலின் கிலிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியானது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்திலிருந்து வெளியான கிலிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘என்னுடைய பிறந்தநாளன்று என்னை மனமார வாழ்த்திய என்னுடைய அருமை நண்பர் தமிழக முதலமைச்சர் மதிப்பிற்குரிய மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்க்கட்சி தலைவர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மதிப்பிற்குரிய அன்புத்தம்பி துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், ஆந்திர முதலமைச்சர் நண்பர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்களுக்கும், மற்றும் மதிப்பிற்குரிய திரு.பன்னீர் செல்வம், திரு.வைகோ, திருமதி.வி.கே.சசிகலா திரு.திருநாவுக்கரசர், திரு.துரைமுருகன், திரு.அன்புமணி ராமதாஸ், திரு.டி.டி.வி.தினகரன், திரு.அண்ணாமலை. திருமதி.பிரேமலதா விஜயகாந்த. திரு.திருமாவளவன், திரு.வாசன், திரு.ஏ.சி.சண்முகம், திரு சீமான், அன்புத்தம்பி விஜய் மற்றும் என்னை வாழ்த்திய அனைத்து மத்திய, மாநில அரசியல் நண்பர்களுக்கும், திரையுலகத்திலிருந்து நண்பர் திரு.கமலஹாசன், திரு.வைரமுத்து, திரு.S.P.முத்துராமன் அவர்கள். திரு.விஜயகுமார். திரு.சத்யராஜ். திரு.பாலகிருஷ்ணா, திரு.ஷாருக்கான், திரு.அமீர்கான். திரு.பார்த்திபன், திரு.தனுஷ், திரு.சிவகார்த்திகேயன் மற்றும் அநேக நடிகர், நடிகைகள் திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடக நண்பர்கள், தொலைக்காட்சியினர். கிரிக்கெட் வீரர்களுக்கும் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், அனைத்து சார்ந்த என்னுடைய நலவிரும்பிகளுக்கும். நண்பர்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும். உலகெங்கும் இருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.’ என கூறியுள்ளார்.

அறிக்கையை தனது எக்ஸ் தளத்தில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *