35 வருட உதவியாளருக்காக நடிகர் சரத்குமார் செய்த மாபெரும் விஷயம்.. குவியும் பாராட்டு

சரத்குமார்
சரத்குமார், தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகி பின் ஹீரோவாக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.
அரசியலில் முழு கவனம் செலுத்தி வரும் இவர் அவ்வப்போது படங்களிலும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் ‘3BHK’ என்ற திரைப்படம் வெளியானது.
செய்த விஷயம்
இந்நிலையில், சரத்குமார் குறித்து யாரும் அறியாத சில விஷயங்களை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பகிர்ந்துள்ளார்.
அதில், ” நடிகர் சரத்குமாரிடம் ஏறத்தாழ 35 ஆண்டுகளாக முத்து என்பவர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். முத்துவின் மகள் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
மேலும், இவருடைய மகன் பிரான்ஸ் நாட்டில் ஃபேஷன் டிசைன் பயின்று வருகிறார். இவை அனைத்திற்கும் சரத்குமார் தான் காரணம். தன் உதவியாளரின் குழந்தைகளுக்கு சரத்குமார் படிப்பு விஷயத்தில் உதவி செய்தது பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.