இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி தந்தை காலமானார்

இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி தந்தை காலமானார்


ஐதராபாத்,

தெலுங்கு சினிமாவின் இசை ஜாம்பவமாக இருப்பவர் எம்.எம் கீரவாணி. இவரது தந்தை மற்றும் மிகச்சிறந்த பாடலாசிரயராவார் சிவ சக்தி தத்தா. இவர் இன்று உடல்நிலைக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 92 ஆகும்.

திரைக்கதை எழுத்தாளரான விஜயந்திர பிரசாத்தின் மூத்த சகோதரர் மற்றும் இயக்குநர் ராஜ மவுலியின் மாமா ஆவார் சிவ சக்தி தத்தா. இவர் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், மகதீரா, ராஜன்னா மற்றும் ஸ்ரீ ராமதாசு போன்ற படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். இவர் 2007 ம் ஆண்டு சந்திராஸ் படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

இவரது பாடல் வரிகள் கலாச்சார செழுமை மற்றும் தத்துவ ஆழம் கொண்டுள்ளாத இருக்கும். இவரது இறப்பு திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைத்துறை சார்ந்தவர்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அவர்களது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. இப்பாடலுக்கு எம்.எம் கீரவாணி இசையமைத்திருந்தார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *