அமீர் கான் இடையே காட்சிகள் இல்லை…வெளியான ”கூலி” அப்டேட்|Coolie update: No combo scenes between Nagarjuna & Aamir Khan

சென்னை,
நடிகர் நாகார்ஜுனா, ”கூலி” படத்தில் தனக்கும் அமீர்கானும் இடையே காட்சிகள் இல்லை என்று கூறி இருக்கிறார்.
அவர் கூறுகையில், “கூலியில் ரஜினி சாருடன் பல காட்சிகளில் நடித்திருக்கிறேன். ஆனால், ஆமீருடன் ஒன்றாக காட்சிகளில் நடிக்கவில்லை. அமீருக்கும் எனக்கும் வெவ்வேறு சாப்டர்கள். நீங்கள் ஒரு புதிய அமீரைப் பார்த்து அதிர்ச்சியடைவீர்கள் ” என்றார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படம், அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள வார் 2 படத்துடன் மோதுகிறது.
இப்படத்தில் ரஜினிகாந்த், உபேந்திரா, சவுபின் ஷாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான், மோனிஷா பிளெஸ்ஸி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.