மாகாபா என்றால் இது தான் அர்த்தம்.. பெயருக்கு விளக்கம் கொடுத்த மாகாபா ஆனந்த்

விஜய் டிவியில் தற்போது முன்னணி தொகுப்பாளராக இருப்பவர் மாகாபா ஆனந்த். அவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள்.
மாகாபா என்பது அவரது பெயருக்கு முன்னாள் இருக்கும் இனிஷியல் என்று தான் எல்லோரும் நினைத்து இருப்போம். ஆனால் உண்மை அது அல்ல.
மாகாபா என்றால்..
மாகாபா ஆனந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது பெயர் அர்த்தம் கூறி இருக்கிறார். அவர் மிர்ச்சி எப்எம்-ல் பணியாற்றிய காலத்தில் நடிகர் மிர்ச்சி செந்தில் தான் அவருக்கு இந்த பெயரை வைத்தாராம்.
Maa Ka Paa என்றால் ஹிந்தியில் ‘அம்மாவுக்கு அப்பா’ என்பது அர்த்தம். RJவாக இருப்பவருக்கு ஒரு அடையாளம் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு பெயரை வைத்து இருக்கிறார்.
அப்போது இருந்து இப்போது வரை மாகாபா என எல்லோரும் அவரை அழைத்து வருகிறார்கள். அதுவே ஒரு பிராண்ட் ஆகவும் மாறிவிட்டது என மாகாபா ஆனந்த் தெரிவித்து இருக்கிறார்.