வதந்திகளை பரப்புவோருக்கு என்ன ஆனந்தம் கிடைத்துவிட போகிறது? – கோமலி பிரசாத் | What joy will those who spread rumors get?

வதந்திகளை பரப்புவோருக்கு என்ன ஆனந்தம் கிடைத்துவிட போகிறது? – கோமலி பிரசாத் | What joy will those who spread rumors get?


‘ரவுடி பாய்ஸ்’, ‘செபாஸ்டியன் பி.சி. 524’, ‘ஹிட்-3’, ‘சசிவதனே’ போன்ற தெலுங்கு படங்களில் நடித்தவர் கோமலி பிரசாத். பல் மருத்துவம் படித்துள்ள கோமலி பிரசாத், நடிப்புக்கு முழுக்குபோட்டு விட்டு, மீண்டும் மருத்துவ தொழிலுக்கு சென்றுவிட்டதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

இதனை கோமலி பிரசாத் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, “நான் சினிமாவில் இருந்து விலகிவிட்டதாக வரும் தகவல்களில் உண்மையில்லை. யாரும் நம்பவேண்டாம். எந்த சூழலிலும் சினிமாவில் இருந்து விலக மாட்டேன்.

இதுபோல செய்திகளை பரப்புவோருக்கு என்ன ஆனந்தம் கிடைத்துவிட போகிறது? என்பது தெரியவில்லை. இப்படி வதந்தி பரப்பாதீர்கள்” என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *