2025-ல் வரவேற்பை பெறும் குடும்ப படங்கள்

சென்னை,
இந்த ஆண்டின் முதல் பாதியில் வெளியான குடும்பம் சார்ந்த தமிழ் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் வலுவாக இருந்துள்ளது. இந்தப் படங்களின் வெற்றிக்கு நட்சத்திரங்களின் பலத்தை விட தரமான கதைகளே காரணமாக அமைந்திருக்கிறது.
வன்முறை, ஆக்சன் திரைப்படங்களில் கவனம் செலுத்திய ரசிகர்கள், தற்போது குடும்பம் சார்ந்த கதைகளை நோக்கி திரும்பி உள்ளதாக விநியோகஸ்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதன்படி,”மதகஜராஜா”, ”குடும்பஸ்தன்”, ”டிராகன்”, ”டூரிஸ்ட் பேமிலி”, ”மாமன்”, ”டி.என்.ஏ”, ”3 பி.எச்.கே” மற்றும் ”பறந்து போ” ஆகிய குடும்பம் சார்ந்த படங்கள் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. குடும்பம் சார்ந்த படங்களின் வெற்றி விகிதம் இந்த ஆண்டு அதிகரித்திருக்கிறது.