ரன்வீர் சிங்கின் ''துரந்தர்'' – பாராட்டப்படும் மாதவன்…!

சென்னை,
ரன்வீர் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புதிய படமான ”துரந்தரின்” பர்ஸ்ட் லுக் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது. அது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
ரன்வீரின் தோற்றம் பாராட்டுகளைப் பெற்றது. இதில் ஆர். மாதவனின் தோற்றம் உண்மையிலேயே பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது.
முற்றிலும் அடையாளம் காண முடியாத அளவுக்கு மாதவன் தனது தோற்றத்தை மாற்றி நடித்திருக்கிறார். மாதவனின் இந்த மாற்றம் இணையத்தில் ஒரு பரபரப்பான விஷயமாக மாறியது. சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் அவரை ரசிகர்கள் பாராட்டினர்.
இந்த படத்தில் சாரா அர்ஜுன், சஞ்சய் தத், அக்சய் கன்னா மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். துரந்தரை ஆதித்யா தார் இயக்கியுள்ளார்