தாயாக நடிப்பதில் பெருமைப்படும் இளம் நடிகை|Young actress proud to be a mother to 4 children

சென்னை,
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தெலுங்கு திரையுலகில் ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’ படத்தின் மூலம் பிரபலமானார். இந்தப் படத்தில் வெங்கடேஷின் மனைவியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அனில் ரவிபுடி இயக்கிய இந்தப் படம், பொங்கலுக்கு வெளியாகி பிளாக்பஸ்டரானது.
மீனாட்சி சவுத்ரி இந்தப் படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற டானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவர், ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து அவர் பேசினார். அவர் கூறுகையில், ” ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’ படத்தில் 4 குழந்தைகளுக்கு தாயாக நடித்தேன். ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’ 2 எடுத்தால், எனக்கு 6 குழந்தைகள் இருக்கும் என்று இயக்குனர் அனில் ரவிபுடி கூறினார்.
குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நல்ல நடிகையாக இருக்க, எந்த வேடத்திலும் நடிக்க வேண்டும். அத்தகைய வேடங்களில் நடிப்பதற்கு வயது ஒரு தடையல்ல. பல படங்களில் தாயாக நடித்துள்ளேன்” என்றார். தற்போது, இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.