விக்ரம் பிரபுவின் "லவ் மேரேஜ்" பட வசூல் அப்டேட்

சென்னை,
கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘கும்கி’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விக்ரம் பிரபு . அந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, இவர் நடிப்பில் வெளியான ‘டாணாக்காரன், இறுகப்பற்று, சிகரம் தொடு, இவன் வேற மாதிரி’ உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர் தற்போது அறிமுக இயக்குனர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் மேரேஜ்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ பட புகழ் நடிகை சுஷ்மிதா பட் நடித்துள்ளார். மேலும், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படமாக ‘லவ் மேரேஜ்’ உருவாகியுள்ளது. இப்படம் கடந்த மாதம் 27ம் தேதி வெளியானது.
இப்படத்தின் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் 7 நாட்களில் ரூ.1 கோடியே 10 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.