சினிமாவில் 22 ஆண்டுகள் நிறைவு.. த்ரிஷா வெளியிட்ட உருக்கமான பதிவு

நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா இன்று தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். லியோ, கோட் படங்களை தொடர்ந்து விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
மேலும் தெலுங்கில் விஸ்வம்பரா, மலையாளத்தில் ராம் என மற்ற மொழி படங்களிலும் த்ரிஷாவின் கைவசம் உள்ளன.
இளம் நடிகைகளுக்கு போட்டியாக இன்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷா கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 22 ஆண்டுகள் முடிந்துள்ளது.
உருக்கமான பதிவு
இந்நிலையில், த்ரிஷா அவரது ட்விட்டர் தளத்தில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் சினிமாவில் அறிமுகமாகி இன்று 22 ஆண்டுகள் ஆகி உள்ளது. ரசிகர்களான உங்களால் தான் இது அனைத்தும் நடந்தது அதற்கு மிகவும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.
Honoured to be part of this magic called cinema for 22 years😇🧿
Thank you all🙏🏻
13.12♥️ pic.twitter.com/AMC0LUzNma— Trish (@trishtrashers) December 13, 2024