"பறந்து போ" திரைப்படத்தை பாராட்டிய அட்லீ

சென்னை,
“கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி” உள்ளிட்ட எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர் இயக்குனர் ராம் . இவர் தற்போது ‘பறந்து போ’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்த ‘ரோட் டிராமா’வாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், ‘பறந்து போ’ படத்தை பாராட்டி இயக்குனர் அட்லீ வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ” ‘பறந்து போ’ திரைப்படம் மிகவும் நெருக்கமாக இருந்தது. ஒரு அப்பாவிற்கும் மகனுக்குமான உறவை மிக அழகாக காண்பித்து இருந்தனர். படத்தில் இடம் பெற்ற பாடல்கள் நன்றாக இருந்தது. சிவா மற்றும் அஞ்சலி கதாப்பாத்திரம் மிகவும் பிடித்து இருந்தது. கண்டிப்பாக இது அனைத்து மக்களுக்கும் பிடிக்கும். ராம் அண்ணாக்கு வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.