மீண்டும் ''டகோயிட்'' படப்பிடிப்பை தொடங்கிய மிருணாள் தாகூர்

சென்னை,
அதிவி சேஷ் கதாநாயகனாக நடிக்கும் ஆக்சன் காதல் படமான “டகோயிட்” படத்தின் படப்பிடிப்பில் மிருணாள் தாகூர் மீண்டும் இணைந்திருக்கிறார்.
முதலில் இந்த படத்தில் அதிவி சேஷுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருந்தார். ஆனால், கூலி படப்பிடிப்பில் அவர் பிஸியாக இருந்ததால், இப்படத்திற்கு போதுமான நேரம் ஒதுக்க முடியவில்லை. இதனால், ஸ்ருதிஹாசன் இப்படத்தில் இருந்து விலகினார். பின்னர், அவருக்கு பதிலாக மிருணாள் தாகூர் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில், மிருணாள் தாகூர் டகோயிட் படப்பிடிப்புக்காக ஐதராபாத் வந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டிருக்கிறார். அதிவி சேஷுடன் இடம்பெரும் முக்கிய காட்சிகள் இங்கு படமாக்கப்படுகின்றன. டகோயிட் படம் டிசம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இது மட்டுமில்லாமல், முருணாள் தாகூர், பாலிவுட்டில் “சன் ஆப் சர்தார் 2” மற்றும் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுனுடன் உருவாகி வரும் பான்-இந்தியா படம் ஆகியவற்றையும் கைவசம் வைத்திருக்கிறார்..