"டபுள் கேம்" பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

சென்னை,
புதுமுக நடிகர் தமிழ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘டபுள் கேம்’ எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநர்கள் சீனு ராமசாமி- மித்ரன் ஆர். ஜவகர் – விஜய் மில்டன் ஆகியோர் இணைந்து அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் தாஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டபுள் கேம்’ திரைப்படத்தில் தமிழ், சாய் பிரியா தேவா, விஹான், ரியாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஜய் .எஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை டாம்’ஸ் கன்சல்டன்சி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தமிழழகன் தயாரிக்கிறார்.
இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் மூலம் நடிகர் தமிழ் கதையின் நாயகனாக அறிமுகமாவதால் படக் குழுவினர் நாயகனை ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்க்க கடுமையாக உழைத்து வருகிறார்கள்.