இயக்குநர் சுதா கொங்கராவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட "பராசக்தி" படக்குழு

சென்னை,
சுதா கொங்கர பிரசாத் 2010-ம் ஆண்டு “துரோகி” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானவர். மாதவன் நடித்த “இறுதிச்சுற்று” திரைப்படத்தினை 2016ல் இயக்கியுள்ளார். 2020ம் ஆண்டில், ‘சூரரைப் போற்று’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்
ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுதா கொங்கரா. இவர் தற்போது சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்து வரும் ‘பராசக்தி’ படத்தை இயக்கி வருகிறார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் இப்படம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இயக்குநர் சுதா கொங்கராவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘பராசக்தி’ படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.