தமிழில் அறிமுகமாகும் பிரபல பாலிவுட் நடிகர்

சென்னை,
நட்சத்திர நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் சகோதரர் அபர்சக்தி குரானா, கிரைம் திரில்லர் படமான ”ரூட் – ரன்னிங் அவுட் ஆப் டைம்” மூலம் தமிழ் சினிமாவில் கால் பதிக்கத் தயாராகி உள்ளார்.
நடிகர், பாடகர் மற்றும் தொகுப்பாளர் என பல திறமைகளை கொண்ட அபர்சக்தி, சமீபத்தில் ”ஸ்ட்ரீ 2” படத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.
தமிழில் இவர் நடிக்கும் இப்படத்தில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். பவ்யா திரிகா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை ‘நாளைய இயக்குனர் சீசன் 1’ மூலம் கவனத்தை ஈர்த்த சூரியபிரதாப் இயக்குகிறார்.