”பிரீடம்” – ”உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம்” – சசிக்குமார்|”Freedom” – ”A film based on a true incident”

சென்னை,
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தை தொடர்ந்து சசிகுமார் ”பீரிடம்” படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை சத்யசிவா இயக்கி இருக்கிறார்.
இதில் கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ”பிரீடம்” படம் 1995-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என்று சசிக்குமார் கூறி இருக்கிறார்.
அவர் கூறுகையில், ”வித்தியாசமான படங்களில் நடிக்க தற்போது தயாராகி இருக்கிறேன். அப்படிப்பட்டவைதான் ”நந்தன்”, ”டூரிஸ்ட் பேமிலி”, ”பிரீடம்” போன்ற படங்கள்.
1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று சிறையிலிருந்து தப்பியோடிய இலங்கை அகதிகள் பற்றிய உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ”பிரீடம்” திரைப்படம் உருவாகி இருக்கிறது. இது ”டூரிஸ்ட் பேமிலி” படத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட படம்” என்றார்.