”பிடிக்காத போதும், கவர்ச்சியை காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்” – ஸ்ரீரெட்டி |”I was pushed into a situation where I had to show attractiveness even if I didn’t like it”

”பிடிக்காத போதும், கவர்ச்சியை காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்” – ஸ்ரீரெட்டி |”I was pushed into a situation where I had to show attractiveness even if I didn’t like it”


சென்னை,

கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘நேனு நானா அபத்தம்’ என்னும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம் ஆனார் நடிகை ஸ்ரீரெட்டி . பின் அரவிந்த் 2 மற்றும் ஜிந்தகி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

மிகக்குறைவான படங்களே நடித்தாலும், சினிமாவில் நடக்கும் உண்மைகளை அம்பலப்படுத்தியதற்காக தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே பரவலாக அறியப்படுகிறார்.

பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சியை காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாக ஸ்ரீ ரெட்டி கூறுகிறார். அவர் கூறுகையில்,

”படவாய்ப்புகளும் இல்லை, ‘ரியாலிட்டி ஷோ’ போன்ற டி.வி. நிகழ்ச்சிகளிலும் என்னை சேர்க்க யோசிக்கிறார்கள். இதனால்தான் ஒரு ‘யூடியூப்’ சேனல் தொடங்கினேன். அதில், கவர்ச்சியை காட்டி சமையல் செய்து கவனம் ஈர்க்கிறேன்.

சமையலுக்கு எதுக்கு கவர்ச்சி என்று யோசிக்கலாம். வாய்ப்புகள் இல்லாமல் கிடக்கும் எனக்கு வேறு வழியில்லை. எனக்கு பிடிக்காத போதும், கவர்ச்சியை காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். ‘யூடியூப்’ சேனல் மூலம் கிடைக்கும் வருமானம் இப்போது எனக்கு கைகொடுக்கிறது” என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *