Pawan Kalyan praised Arjun Das’ voice

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019ல் வெளிவந்த ‘கைதி’ படத்தின் மூலம் பிரபலமானவர் அர்ஜுன் தாஸ் அவருடைய வித்தியாசமான குரல் அவருக்கு மிகவும் பிளஸ் பாயின்ட்டாக அமைந்துள்ளது. மாஸ்டர், அநீதி, குட் பேட் அக்கி ஆகிய படங்களில் அவருடைய நடிப்பும் பாராட்டப்பட்டது. தற்போது பவன் கல்யாண் நடித்து வரும் ஓஜி தெலுங்கு படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் அர்ஜுன் தாஸ் நடித்து வருகிறார்.
பவன் கல்யாண் நடித்து ஜுலை 24ல் வெளியாக உள்ள ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் அர்ஜுன் தாஸின் பின்னணிக் குரல் டிரெய்லருக்கு ஒரு தனித்துவத்தைக் கொடுத்துள்ளது.
அது குறித்து “பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீர மல்லு’ பட டிரெய்லருக்கு எனது குரலைக் கேட்கும் போது ஆம் என்றுதான் சொல்ல வேண்டும் எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை. இது உங்களுக்கானது சார்” என அவரை டேக் செய்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்
அதற்கு பவன் கல்யாண் “அன்பு சகோதரர், அர்ஜுன் தாஸ், நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மிக அரிதாகவே நான் ஒரு உதவி கேட்டேன். என் உதவியைக் கருத்தில் கொண்டதற்கு நன்றி. உங்கள் குரலில் ஒரு மேஜிக்கும். மெலடியும் இருக்கிறது” என்று பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.