‘கருப்பு’ படத்தின் டீசர் எப்போது?.. அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்

சென்னை,
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, கருப்பு படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அதாவது, கருப்பு படத்தின் டீசர் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ந் தேதி வெளியாகும் என்றார். மேலும், இது ஒரு சிறந்த படம் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.