குக் வித் கோமாளியில் புது நடுவர்கள்.. அதிர்ச்சி ஆன போட்டியாளர்கள்! லேட்டஸ்ட் ப்ரோமோ

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஷோ தொடங்கி கிட்டத்தட்ட 10 வாரங்களை நெருங்கிவிட்டது. இதுவரை இரண்டு போட்டியாளர்கள் மட்டுமே எலிமினேட் செய்யப்பட்டு இருக்கின்றனர் .
சௌந்தர்யா மற்றும் கஞ்சா கருப்பு ஏற்கனவே வெளியேறி விட்டனர், மீதம் இருக்கும் எட்டு போட்டியாளர்களில் அடுத்து வெளியேற போவது யார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
அடுத்த எபிசோடு ப்ரோமோ
இந்நிலையில் வரும் சனிக்கிழமை ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி எபிசோடு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் போட்டியாளர்களாக வரும் சிக்கல் என்ன என்பது பற்றி காட்டி இருக்கின்றனர்.
சுட்டிக் குழந்தைகள் தான் இந்த வாரம் கெஸ்ட் ஆக வருகிறார்கள். அவர்கள் எல்லோரையும் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு குக் சமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி அந்த குழந்தைகள் தான் நடுவர்களாக உணவை சாப்பிட்டு மார்க் கொடுக்க போகிறார்கள். அது போட்டியாளர்களுக்கு ஷாக் தான் கொடுத்திருக்கிறது.
அதை சமாளிப்பார்களா? ப்ரோமோவில் பாருங்க