சாய் பாபாவின் மாயா படத்தில் நடித்த இந்த சிறுமி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?

மாயா படம்
தமிழ் சினிமாவில் 90களில் காதல் படம், குடும்ப படம், ஆக்ஷன் படங்கள் வந்தாலும் பக்தி படங்களும் அதிகமாக வந்துள்ளது.
அம்மன் பக்தி படங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் சாய் பாபாவை மையமாக வைத்து வெளியான படம் தான் மாயா. ராம நாராயணன் இயக்கிய இந்த படத்தில் நெப்போலியன், நக்மா, ராமி ரெட்டி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
சாய் பாபாவின் தீவிர பக்தராக எஸ்.பி.பாலசுப்பிரமணியன் நடித்திருந்த நிலையில், ஜெயசூர்யா என்ற கேரக்டரில் ஷீலா கவுர் என்பவர் நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷீலா கவுர் நாயகியாகவும் நடித்திருக்கிறாராம்.
முழு விவரம்
கடந்த 1994ம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான ராஜகுமாரன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷீலா கபுர், அர்ஜுனுடன் ஆயுத பூஜை, விஜய்யுடன் பூவே உனக்காக, சூர்யாவின் நந்தா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.
பெரும்பாலும் தங்கை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சீனா தானா படத்தில் பிரசன்னாவிற்கும், வேதா படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
தமிழில் வேதா படத்தில் கடைசியாக நடித்தவர் கன்னடத்தில் ஹைபர் படத்தில் நடித்திருந்தார்.
ஷீலா கவுர் கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ் ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டதாக அப்போது புகைப்படங்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.