நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைதான வழக்கு: போதைப்பொருள் ‘சப்ளை’ செய்த 4 பேருக்கு போலீஸ் காவல்

சென்னை,
‘கொகைன்’ போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில், போதைப்பொருள் சப்ளை செய்ததாக சேலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார், பெங்களூருவை சேர்ந்த ஆப்பிரிக்க நாட்டவர் ஜான், அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் பிரசாத், நடிகர் கிருஷ்ணாவின் நண்பர் கெவின் ஆகிய 4 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கிறார்கள்.
இந்த 4 பேரையும் சென்னை போதைப்பொருள் சிறப்பு கோர்ட்டு அனுமதியுடன் நுங்கம்பாக்கம் போலீசார் 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தனர். அவர்கள் 4 பேரிடமும் அதிரடி விசாரணை நடக்கிறது.