அந்த காட்சியில் நடிக்கும்போது என்னை அறியாமல் என் உடல் நடுங்கியது – நடிகர் ஜெய் | My body acted without me knowing while acting in that scene

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெய், தற்போது பாபு விஜய் தயாரித்து இயக்கியுள்ள ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்திருக்கிறார். யோகிபாபு, ‘கருடா’ ராம், ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ரொமான்டிக் – திரில்லர் படமாக உருவாகி வரும் இதில், ‘லாக்-அப்’பில் போலீசிடம் ஜெய் அடிவாங்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. போலீசிடம் ஜெய் மாட்டிக்கொண்டதாகவும் இணையத்தில் தகவல்கள் வேகமாக பரவியது.
இதுகுறித்து ஜெய் கூறும்போது, ”புதிய படத்தின் ‘ஸ்டில்’கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நான் நடித்தபோது அடைந்த பதற்றம் இதுவரை எனக்கு வந்தது கிடையாது. காவல் நிலையத்தில் போலீசாரிடம் அடிவாங்கும் காட்சிகளில் என்னை அறியாமல் உடல் நடுங்கியது.
இன்றைய சமூகத்தில் நடக்கும் மிக முக்கிய பிரச்சினையை மையப்படுத்தி கதை உருவாகிறது. பொதுவாக மனதை தாக்கும் கதைகளில் நடிக்க எனக்கு பிடிக்கும். அதன்படி தான் என் படங்களும் அமைந்து வருகின்றன”, என்றார்.