உருவ கேலி செய்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை- குஷ்பு | No one has the right to make fun of images

சென்னை,
சினிமாவில் இருப்பவர்கள் 2 வகையான அழுத்தங்களை எதிர் கொள்கிறார்கள் என நடிகை குஷ்பு கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், நடிகைகளுக்கு சினிமாவை விட வெளி உலகத்தில் இருந்துதான் அழுத்தங்கள் அதிகமாக இருக்கிறது.
சமூக வலைதளங்களில் இருந்துதான் நடிகைகளுக்கு அழுத்தம் அதிகமாக இருக்கிறது. சரியான உடை, மேக்கப், லிப்ஸ்டிக் போன்று எல்லாவற்றிலும் சமூக வலைதளங்களால் அழுத்தம் அதிகரிக்கிறது. நாங்கள் சல்வார், ஜீன்ஸ், குர்தா அணிந்து வெளியே வந்தால் உண்மையான ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். உருவ கேலி செய்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
சமூக வலைதளங்களில் வெளியிடும் உருவ கேலிகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். எனக்கு இதுவரை டிசைனர் இல்லை. மேக்கப் ஆர்டிஸ்டும் இல்லை. திருமணத்திற்கோ, நிகழ்ச்சிகளுக்கோ செல்லும் போது நானே என்னை தயார் செய்து கொள்கிறேன். என்னுடைய முகபராமரிப்புகளுக்காக மருத்துவமனைக்கு அடிக்கடி செல்வேன். மேக்கப் போடுவதை எப்போது நிறுத்த வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். இந்த வயதில் நான் 20 வயது பெண்ணை போல தெரிய வேண்டும் என்றால் அதற்கு மந்திர கோல்தான் வேண்டும். வயதாவதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பெண்கள் வெளிப்புறத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் அகத்திலும் கவனம் செலுத்த வேண்டும். பெரும்பாலான பெண்கள் இதைத்தான் தவற விடுகிறார்கள். ஏனெனில் அவர்கள் தோற்றம் மட்டுமே முக்கியம் என்று நினைக்கிறார்கள். உள்ளே இருப்பது முக்கியமல்ல என நினைக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.