“கண்ணப்பா” படம் : நடிகர் விஷ்ணு மஞ்சுவிற்கு வாழ்த்து செய்தி அனுப்பிய – சூர்யா

சென்னை,
தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் ‘கண்ணப்பா’. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார்.
மேலும், மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் உலகம் முழுவதும் கடந்த 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகர் சூர்யா கண்ணப்பா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விஷ்ணு மஞ்சுவிற்கு பூங்கொத்துடன் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
அதில், அன்புள்ள சகோதரர் விஷ்ணுவுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் ஆர்வம், கடின உழைப்பு மற்றும் அனைத்து எதிர்பார்ப்புகளிலும் நம்பிக்கை ஆகியவை உண்மையிலேயே பலனளித்துள்ளன. பல இதயங்களைத் தொடும் ஒன்றை உருவாக்கியதற்காக உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் இன்னும் அதிக வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன்” என்று எழுதியுள்ளார்.