நான் தமிழுக்கு விரோதமானவன் அல்ல.. தமிழ்தான் எங்களுக்கு சோறு போடுகிறது – பாக்யராஜ்

நான் தமிழுக்கு விரோதமானவன் அல்ல.. தமிழ்தான் எங்களுக்கு சோறு போடுகிறது – பாக்யராஜ்


சென்னை,

ரஜின், சிவதா, ரம்யாபாண்டியன் நடிப்பில் ‘கயிலன்’ என்ற படத்தை அருள் அஜித் இயக்கியுள்ளார். இந்த படத்தை பி.டி.அரசகுமார் தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

கயிலன் பட விழாவில் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசும்போது, “படங்களின் பெயர்கள் தமிழில் சூட்டப்படாதது குறித்து கே.ராஜன் போன்றவர்கள் ஆதங்கப்படுவதை பார்த்து நானும் யோசித்தேன். ‘டார்லிங்…டார்லிங்…டார்லிங்…’ என்றெல்லாம் நானும் படத்துக்கு பெயரை வைத்துள்ளேனே… என்று எண்ணம் வந்தது.

ஜனரஞ்சகமான துறை என்பதால், ஜனங்கள் ரசிக்கும்படியான தலைப்புகளை சூட்டினேன். மற்றபடி நான் தமிழுக்கு விரோதமானவன் அல்ல. தமிழ்தான் எங்களுக்கு சோறு போடுகிறது.

அதேபோல படங்கள் குறித்து வன்மத்துடன் விமர்சனங்கள் வருவதாக கூறுகிறார்கள். என்னை பொறுத்தவரை நல்ல படங்களை எந்த விமர்சனங்களும் தடுத்திட முடியாது. அந்த படங்கள் ஓடத்தான் செய்யும். நல்ல படங்களை தேவையில்லாமல் விமர்சனமும் செய்யமாட்டார்கள் என்பது என் கருத்து” என்றார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *