‘ஊ சொல்றியா’ பாடலை காப்பியடித்த பாடகி…குற்றம் சாட்டும் தேவி ஸ்ரீ பிரசாத்|Devi Sri Prasad alleges Oo Antava was copied, fans point to Turkish singer Atiye

‘ஊ சொல்றியா’ பாடலை காப்பியடித்த பாடகி…குற்றம் சாட்டும் தேவி ஸ்ரீ பிரசாத்|Devi Sri Prasad alleges Oo Antava was copied, fans point to Turkish singer Atiye


சென்னை,

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா’ பாடலை “ஹாலிவுட்” பாடலில் காப்பியடித்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்காக அந்த பாடகி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும், அதேசமயம் பாடலின் உலகளாவிய ஈர்ப்பை எண்ணி பெருமைப்படுவதாகவும் கூறினார். இந்த பாடல் கடந்த ஆண்டு வெளியான ஹாலிவுட் பாடகி அதியேவின் ‘அன்லயானா’வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா’ பாடல் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் சமந்தா கவர்ச்சி நடனமாடி இருந்தார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *