நடிகை ஷெபாலியின் திடீர் மரணம் – விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்

நடிகை ஷெபாலியின் திடீர் மரணம் – விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்


சென்னை,

இந்தி நடிகை ஷெபாலி ஜரிவாலா(42)-ன் திடீர் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும்நிலையில், விசாரணையில் அவரது மரணம் குறித்து வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 2002 ம் ஆண்டு ”காந்தலாகா” ஆல்பம் பாடல் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ஷெபாலி ஜரிவாலா. ஒரே பாட்டில் பணக்காரனாவதை போல, இந்த ஒரே பாடல் ஷெபாலியின் கெரியரையே மொத்தமாக மாற்றியது.

இவர் பெரிய அளவில் திரைப்படங்கள் பண்ணவில்லை என்றாலும், அவரின் ”காந்தலாகா” பாடல் கிட்டதட்ட கால் நூற்றாண்டுகள் கடந்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது.

இவரது முதல் திருமணம் விவாகரத்தில் முடிய, கடந்த 2014 ம் ஆண்டு நடிகர் பரத் டயாகியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு கடந்த 2019 ம் ஆண்டு இந்தி பிக்பாஸ் 13 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இந்தியா முழுவதும் பிரபலமானார்.

இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடிகை ஷெபாலியின் மரண செய்தி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரணம் குறித்து பல்வேறு ஊகங்களும், வதந்திகளும் பரவ ஆரம்பித்தன. சிலர் அவர் உயிரிழந்ததற்கு இளமையை தக்க வைக்கும் மருந்துகளை உட்கொண்டதே காரணம் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில், விசாரணை நடத்திவரும் போலீசார், வெறும் வயிற்றில் பல்வேறு மாத்திரைகளை உட்கொண்டது அவரது உயிரை பறித்திருக்கலாம் என்று கூறி உள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று வெள்ளிக்கிழமை நடிகை ஷெபாலி ஜரிவாலா வீட்டில் பூஜைக்காக உண்ணாவிரதம் இருந்ததாகவும், மதியம் அவர் இளமையை தக்க வைப்பதற்கான ஊசி மருந்தை எடுத்துக்கொண்டு இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறினர்.

மேலும், இரவில் வழக்கமாக அவர் உட்கொள்ளும் மாத்திரைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டதாகவும் இதனால் அவரது உடலில் ரத்த அழுத்தம் வேகமாக குறைந்து, உடலில் நடுக்கம் ஏற்பட்டதாகவும் கூறினர்.

போலீசார் இதுவரை அவரது கணவர், பெற்றோர் மற்றும் வீட்டில் வேலை செய்பவர்கள் உள்பட 10 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் அந்த நேரத்தில் வீட்டில் இருந்ததாகவும், இருப்பினும் இதுவரை சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கூறி இருக்கின்றனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக தடயவியல் அறிவியல் நிபுணர்களும், போலீஸ் குழுவும் அவரது வீட்டிற்கு சென்று அவரது மருந்துகள் மற்றும் ஊசி உள்பட பொருட்களின் மாதிரிகளை சேகரித்திருக்கின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *