”பேட்மேன் 2” – ஸ்கிரிப்ட் பணி நிறைவு: இயக்குனர் கொடுத்த புதிய அப்டேட்|Matt Reeves Reveals ‘The Batman 2’ Script Is Finally Complete

சென்னை,
‘தி பேட்மேன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகு, இயக்குனர் மேட் ரீவ்ஸ் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் மேட்சன் டாம்லின் ஆகியோர் ஸ்கிரிப்ட் பணியை முடித்துள்ளனர். பல மாத காத்திருப்பிற்குப்பிறகு ‘தி பேட்மேன் 2’ குறித்த இந்த முக்கிய அப்டேட் வெளியாகி இருப்பது ரசிகர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது.
இயக்குனர் மேட் ரீவ்ஸ், திரைக்கதையின் பிளாக் அண்ட் வைட் புகைப்படத்தை தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்து இதனை தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆண்டு ”தி பேட்மேன் 2” படப்பிடிப்பு தொடங்கும் என்றும், ராபர்ட் பாட்டின்சன் மீண்டும் கேப்டு க்ரூஸேடராக நடிக்க உள்ளார் என்றும் ரீவ்ஸ் உறுதிப்படுத்தி இருக்கிறார். தாமதம் ஏற்பட்டிருந்தாலும், ரசிகர்கள் இதனை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இப்படத்தை 2027-ம் ஆண்டு அக்டோபர் 1 அன்று திரையிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.
இயக்குனர் மேட் ரீவ்ஸ் இயக்கத்தில் உருவான ‘பேட்மேன்’ திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியானது. அதில் ‘ட்வைலைட்’ படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ராபர்ட் பேட்டின்சன் பேட்மேனாக அவதாரமெடுத்தார். இவரது நடிப்பு இதற்கு முன்பு பேட்மானாக நடித்தவர்களிடம் இருந்து சற்று மாறுபட்டு இருந்தது. இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.