ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால்

சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த ‘விண்ணைதாண்டி வருவாயா’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து ‘பானா காத்தாடி, நீதானே பொன் வசந்தம், அஞ்சான்’ என பல படங்களில் நடித்து பிரபலமானார்.அதனை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார் சமந்தா. ஆனால் அவர் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு கிடைக்காமலே இருந்தது. அந்த சமயத்தில் 2014-ம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து, விஜய்யுடன் இணைந்து ‘தெறி, மெர்சல்’ என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
கடைசியாக தமிழ் சினிமாவில் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்த போதிலும் சாகுந்தலம் மற்றும் குஷி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தார். இந்த 2 படங்களுமெ போதுமான ரீச் கொடுக்கவில்லை. அப்பாவின் மறைவு, மயோசிடிஸ் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். மீண்டும் முன்புபோல படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
திரையுலகில் கிட்டத்தட்ட 15 வருடங்களை வெற்றிகரமாக கடத்துவிட்ட சமந்தா தற்போது படங்களில் அடுக அளவு நடிப்பதை குறைத்துக் கொண்டுள்ளார் ஒருபக்கம் வெப் சீரிஸில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வருகிறார். அதேசமயம் எங்கு சென்றாலும் தனது உடற்பயிற்சியை மட்டும் நாள்தோறும் தவறாமல் தொடர்ந்து செய்து வருகிறார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவ்வப்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களின் பார்வைக்கு பதிவிட்டு வருகிறார் ஆனால் சமந்தாவை பார்ப்பவர்கள் எல்லோரும் அவரை ஏதோ நோய்வாய்ப்பட்டவர்கள் போல ஒல்லியாக இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்வது உண்டு.
இந்த நிலையில் தற்போது சமந்தா தான் புல் அப்ஸ் எடுக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மேலும் “இங்கே பாருங்கள் ஒரு சவால், நான் இப்போது செய்வது போல ஆரம்பத்தில் இதை மூன்று முறை செய்யுங்கள் அப்படி செய்ய முடியாவிட்டால் என்னை ஒல்லியானவள் நோய்வாய்ப்பட்டது போல இருக்கிறீர்கள் என்று யாகும் அழைக்கக்கூடாது ஒருவேளை உங்களால் முடியாவிட்டால் நீங்கள் சொன்னீர்களே அந்த வார்த்தைதான் உங்களுக்கு” என்று கூறியுள்ளார்.