ஸ்ரீலீலாவின் ''ஜூனியர்'' பட டீசர் வெளியீடு

சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. தற்போது இவர் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக பாலிவுட்டிலும், தமிழில் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்திலும், தெலுங்கில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ”மாஸ் ஜாதரா” படத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் ஸ்ரீலீலா, ராதா கிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் ‘ஜூனியர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகனாக கிரீத்தி ரெட்டி நடித்துள்ளார். காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 18-ந் தேதி வெளியாக உள்ளது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தில் ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.