மைக்கேல் செரா |Why Michael Cera Says He Turned Down ‘Fantastic Beasts’ Role

வாஷிங்டன்,
பென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் படங்களில் நடிக்க மறுத்ததாக மைக்கேல் செரா தெரிவித்துள்ளார். ”தி சூப்பர்பேட்”மற்றும் ”ஸ்காட் பில்கிரிம் vs தி வேர்ல்ட்” போன்ற படங்களில் நடித்து பிரபலமான கனடிய நடிகர் மைக்கேல் செரா.
இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் , “பென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்” இல் ஒரு பகுதியாக இருக்க தன்னிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் ஆனால் “மிகவும் பிரபலமாகிவிடுவோமோ” என்ற “பயம்” காரணமாக அதை நிராகரித்ததாகவும் தெரிவித்தார்.
”தி பென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்” படங்கள் எச்.பி.ஓ மேக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகின்றன. செராவின் புதிய படமான ”தி பீனீசியன் ஸ்கீம்” தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
“தி பீனீசியன் ஸ்கீம்” என்பது வெஸ் ஆண்டர்சன் எழுதி இயக்கிய திரைப்படமாகும். இப்படம் கடந்த மே 18 ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பின்னர் மே 29 அன்று ஜெர்மனியிலும், 30 அன்று அமெரிக்காவிலும் வெளியானது.