வில்லனை கதறவிட்ட அரசி.. என்ன செய்தார் பாருங்க! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தற்போது அரசி திருமணத்திற்கு பிறகு பல்வேறு பிரச்சனைகள் பாண்டியன் குடும்பத்திற்கு வந்துகொண்டிருக்கிறது.
திருமண ஏற்பாட்டுக்கு செலவு செய்த 10 லட்சத்தை திருப்பி தரும்படி பாண்டியனின் சகோதரி வந்து சண்டை போட, செந்தில் வங்கி கணக்கில் இருந்து அந்த பணத்தை கொண்டு வந்து கொடுக்கும்படி பாண்டியன் கூறுகிறார். அந்த பணத்தை வேறு விஷயத்திற்கு செலவு செய்துவிட்ட செந்தில் அதை எப்படி இப்போது கொடுப்பது என யோசித்து நிற்க, மீனா தான் அந்த பணத்தை கடன் வாங்கி கொடுத்து அவரை காப்பாற்றுகிறார்.
அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அரசியை அசிங்கப்படுத்த வில்லன் குமரவேல் ஒரு விஷயம் செய்கிறார். அரசி வளர்ப்பு சரியில்லை என சொல்லி அவர் எல்லோர் முன்பும் திட்டுகிறார்.
அதன் பின் அறையில் அரசி பதிலுக்கு குமரவேலை அடித்து உதைத்து ரூமை விட்டு வெளியில் அனுப்புகிறார்.
அதை குமரவேலின் சித்தப்பா பார்த்துவிட அவன் கடும் அதிர்ச்சி ஆகிறான். ப்ரோமோவை பாருங்க.