துளி கூட மேக்கப் போடாமல் நடிகை ரெஜினா கசாண்ட்ரா வெளியிட்ட வீடியோ.. இதோ பாருங்க..

ரெஜினா கசாண்ட்ரா
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் தமிழில் வெளிவந்த கண்ட நாள் முதல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
ஆனால், இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கிய திரைப்படம் என்றால், அது கேடி பில்லா கில்லாடி ரங்கா படம்தான். இதன்பின் ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், சிலுக்குவார்பட்டி சிங்கம், சக்ரா ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து தனக்கென்று தனி இடத்தை உருவாக்கினார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி, ஜாட் மற்றும் கேசரி 2 ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன.
அடுத்ததாக நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். படங்களை போலவே வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேக்கப் போடாமல் வெளியிட்ட வீடியோ
இந்த நிலையில், நடிகை ரெஜினா கசாண்ட்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகத்திற்கு துளி கூட மேக்கப் போடாமல் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..