விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை,
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படம் உருவாகி உள்ள படம் ‘தலைவன் தலைவி’. இது விஜய் சேதுபதியின் 52-வது படமாகும். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நித்யா மேனன், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
குடும்பப் பின்னணியைக் கதையாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. விஜய் சேதுபதி – பாண்டிராஜ் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி புரோட்டா மாஸ்டராக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது.
சமீபத்தில் இந்த படத்திலிருந்து ‘பொட்டல முட்டாயே’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், ‘தலைவன் தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் ஜூலை 25-ம் தேதி வெளியாக உள்ளது.