தலைவன் தலைவி படத்தின் புதிய டீசர்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தலைவன் தலைவி. மண்மணம் மாறாத கிராமத்து கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், தலைவன் தலைவி படத்தின் ரிலீஸ் தேதியை சிறப்பான டீசருடன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த டீசரில் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் குறித்து தெரிவித்துள்ளனர். மேலும் வருகிற ஜூலை 25ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த டீசர்..