M3GAN 2.0: திரை விமர்சனம் – சினிஉலகம்

M3GAN 2.0: திரை விமர்சனம் – சினிஉலகம்


2022ஆம் ஆண்டில் ஹாலிவுட்டில் சக்கைபோடுபோட்ட மேகன் (M3GAN) படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள “மேகன் 2.0” நம்மை மிரட்டியதா என்று பார்ப்போம்.

M3GAN 2.0: திரை விமர்சனம் | M3Gan 2 Review

கதைக்களம்



ஈரான் எல்லையில் இராணுவ முகாமிற்கு அமெரிக்கா அமெலியா என்ற இராணுவ ப்ரோட்டோடைப் ரோபோவை அனுப்புகிறது.

பெண் வடிவில் ஊடுருவும் அந்த ரோபோ, தன்னிச்சையாக செயல்பட்டு முக்கிய நபரை கொலை செய்கிறது. இது அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.


அதன் பின்னர் அமெரிக்காவிற்கு வரும் அமெலியா ரோபோ, பையோமெக்கட்ரானிக்ஸ் நிறுவனர் ஆல்ட்னிடம் சென்று, அவரிடம் இருந்து அமெரிக்காவின் பல்வேறு டேட்டாபேஸை எடுத்துக்கொண்டு தப்பிக்கிறது.

M3GAN 2.0: திரை விமர்சனம் | M3Gan 2 Review

அதே சமயம் முதல் பாகத்தில் செயலிழந்துவிட்டதாக நினைக்கும் மேகன் ரோபோ, AI மூலம் சிறுமி காடியை தொழில்நுட்ப வடிவில் கண்காணித்து பாதுகாக்கிறது.

ஒரு கட்டத்தில் மேகன் தன்னை காடிக்கும், அவரது அத்தை ஜெம்மாவிற்கும் வெளிப்படுத்தி, அமெலியாவிடம் தப்பிக்க உதவி செய்ய தனக்கு உடல் வேண்டும் என்று கேட்கிறது.



பின்னர் மேகனுக்காக ஜெம்மாவும், அவரது குழுவும் மனித வடிவ உடலை தயார் செய்து தருகிறார்கள்.

அமெலியாவின் திட்டம் என்ன? அதனிடமிருந்து தங்களை காப்பாற்றிக் கொண்டு ஜெம்மா, காடி எப்படி அதை மேகனுடன் சேர்ந்து முறியடித்தார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
 

M3GAN 2.0: திரை விமர்சனம் | M3Gan 2 Review

படம் பற்றிய அலசல்  

மேகன் (M3GAN, Model 3 Generative Android) முதல் பாகத்தை இயக்கிய ஜெரார்ட் ஜான்ஸ்டோன்தான் இந்த பாகத்தையும் இயக்கியுள்ளார்.

மாலிக்னன்ட், மேகன் படங்களுக்கு கதை எழுதிய அகேலா கூப்பருடன் சேர்ந்து ஜெரார்ட் கதை எழுதியிருப்பதுடன், திரைக்கதையும் அமைத்துள்ளார்.



ஒவ்வொரு துறையிலும் AI நுழைந்து வரும் இன்றைய சூழலில், இராணுவத்திலும் AI வந்து தன்னிச்சையாக செயல்பட்டுவிட்டால் என்னவாகும் என்ற பயத்தை போகின்ற போக்கில் சீன் ஆக வைத்துள்ளார் இயக்குநர்.

M3GAN 2.0: திரை விமர்சனம் | M3Gan 2 Review

ஆரம்பத்தில் வரும் காட்சிகளை பார்க்கும்போது தமிழில் வெளியான 2.0 திரைப்படம்தான் நமக்கு நியாபகம் வருகிறது.

என்றாலும், இதன் கதை அதிலிருந்து மாறுபட்டது. மேகன் 2.0 ஆக களமிறங்கி அட்டகாசம் செய்யும் காட்சிகள் எல்லாம் அதகளம்.



படத்திற்கு சண்டைக்காட்சிகள் மிகப்பெரிய பலம் என்றே கூறலாம். குறிப்பாக கிளைமேக்சில் ஜெம்மாவின் ஆக்ஷ்ன் மயிர்க் கூச்செரிய செய்யும்.

மனிதருக்குள் சிப் பொருத்துவது, எல்லாவற்றிலும் AI வந்துவிட்டது போன்ற டெக்னீக்கல் விஷயங்கள் எல்லாம் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

M3GAN 2.0: திரை விமர்சனம் | M3Gan 2 Review

ஆனால் ஓவர் வைலென்ஸ்.

அமெலியாவாக நடித்திருக்கும் இவானா சக்ஹ்னோ அச்சு அசல் ரோபோ போலவே உள்ளார். அவரது நடிப்பு மிரட்டல் என்றால், ஜெம்மாவாக வரும் ஆலிசன் வில்லியம்ஸின் நடிப்பு சரவெடி.

காடி ஆக நடித்திருக்கும் வயலட் மேக்கிராவ் யதார்த்த நடிப்பிலும், சில இடங்களில் ஆக்ஷனிலும் நம்மை கவர்கிறார்.



பரபரப்பான திரைக்கதை நம்மை ஸ்க்ரீனை விட்டு வெளியே பார்க்க விடாமல் செய்கிறது. இப்படத்தை பார்க்கும் முன் கண்டிப்பாக முதல் பாகத்தை பார்த்துவிட வேண்டும்.

படம் முழுக்க டெக்னிக்கல் டெர்மில் பேசப்படும் வசனங்களை புரிந்துகொள்வதற்குள் அடுத்த சீன் வந்துவிடுகிறது. 

M3GAN 2.0: திரை விமர்சனம் | M3Gan 2 Review

க்ளாப்ஸ்



பரபரப்பான திரைக்கதை



டெக்னிக்கல் விஷயங்கள்



படத்தின் நீளம்



பல்ப்ஸ்



அதீத வன்முறை சண்டைக் காட்சிகள்



மொத்தத்தில் ஹாலிவுட் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டான ஆக்ஷ்ன் படமாக கவர்கிறாள் இந்த மேகன் 2.0.

M3GAN 2.0: திரை விமர்சனம் | M3Gan 2 Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *