ராஜ்குமார் ராவின் ”மாலிக்”- இலவசமாக பாடலுக்கு நடனமாடிய நடிகை |Huma Qureshi on doing Rajkummar Rao’s Maalik song for free: Can’t charge friends

ராஜ்குமார் ராவின் ”மாலிக்”- இலவசமாக பாடலுக்கு நடனமாடிய நடிகை |Huma Qureshi on doing Rajkummar Rao’s Maalik song for free: Can’t charge friends


சென்னை,

சமீபத்தில் வெளியான ராஜ்குமார் ராவ் நடிப்பில் உருவாகி வரும் ‘மாலிக்’ படத்தில் இடம்பெற்ற ‘தில் தாம் கே’ பாடலில் தனது அசத்தலான நடனத்தால் நடிகை ஹுமா குரேஷி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

இந்த பாடலுக்கு அவர் இலவசமாக நடனமாடி மேலும் கவனத்தை ஈர்த்திருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில், ‘தில் தாம் கே’ என்ற சிறப்பு பாடலுக்கு நடனமாட சம்பளம் வாங்கவில்லை என்று ஹுமா குரேஷி கூறினார்.

அவர் கூறுகையில், ” நான் ஒரு பாடலில் மட்டும் நடனமாடுவது இது முதல் முறை அல்ல. ஆனால் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் அதில் கண்டிப்பாக ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.

உண்மையை சொன்னால், நண்பர்களோடு இணைவதுபோல் உணர்ந்தேன். நண்பர்களிடமிருந்து எப்படி பணம் வாங்க முடியும்?. இரண்டு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்தது. அதனால் பணம் வாங்க வேண்டாம் என்று எனக்கு தோன்றியது” என்றார்.

ராஜ்குமார் ராவ் கதாநாயகனாக நடித்துள்ள கேங்ஸ்டர் படமான ‘மாலிக்’ அடுத்த மாதம் 11-ம் தேதி (ஜூலை) திரையரங்குகளில் வெளியாகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *