”நான் ஒரு காதல் கதையில் நடிப்பது இதுவே முதல் முறை” – அதிவி சேஷ்|This is the first time I’m truly diving into a love story

”நான் ஒரு காதல் கதையில் நடிப்பது இதுவே முதல் முறை” – அதிவி சேஷ்|This is the first time I’m truly diving into a love story


சென்னை,

திரில்லர் மற்றும் ஆக்சன் படங்களில் தனது நடிப்பிற்காக அறியப்பட்ட அதிவி சேஷ், தற்போது டகோயிட் படத்தின் மூலம் காதல் கதையை ஆராய உள்ளார்.

மிருணாள் தாகூர் உடன் அவர் இணைந்து நடிக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து சேஷ் கூறுகையில், “நான் ஒரு காதல் கதையில் நடிப்பது இதுவே முதல் முறை, அதுவே டகோயிட்டை எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக ஆக்குகிறது” என்றார்.

அறிமுக இயக்குனர் ஷானியல் தியோ இயக்கும் இதில், திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ”டகோயிட்” படத்தை டிசம்பர் 25-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *