சுரேஷ் கோபி நடித்த சினிமாவை வெளியிட தடை; போராடும் மலையாள திரையுலகம்

சுரேஷ் கோபி நடித்த சினிமாவை வெளியிட தடை; போராடும் மலையாள திரையுலகம்


நடிகரும், மக்களவை உறுப்பினருமான சுரேஷ் கோபியின் நடிப்பில் உருவாகியுள்ள கே.எஸ்.கே. (ஜானகி v/s ஸ்டேட் ஆப் கேரளா) எனும் திரைப்படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்துக்கு ஜானகி எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஜானகி என்பது சீதா தேவியின் மற்றொரு பெயர் என்பதால், அந்தப் பெயரை மாற்றும்படி மத்திய தணிக்கை வாரியம், அந்தப் படத்தின் தயாரிப்பளர்களுக்கு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது.இதனை எதிர்த்து, மலையாள திரையுலகைச் சேர்ந்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், கேரளத்தின் திருவனந்தபுரத்திலுள்ள மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின், அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, கேரள திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது.

ஜே.எஸ்.கே சினிமாவில் அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீதிமன்ற வாதங்களுடன் கூடிய திரில்லர் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த சினிமாவில் சுரேஷ்கோபி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் ஜானகி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நாயகிக்கு நீதிபெற்றுக்கொடுக்கும் விதமாக சினிமாவின் கதை அமைந்துள்ளது. யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட இந்த சினிமா இன்றுரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் படத்தை வெளியிட சென்சார் போர்டு அனுமதி அளிக்கவில்லை.

இத்துடன், அந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தாமதமாக்கப்படுவதை எதிர்த்து ஜே.எஸ்.கே. படக்குழு கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தணிக்கை வாரியம் அதன் முடிவை விரைவில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தணிக்கை வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட ஜே.எஸ்.கே. திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக திரையரங்குகளில் ஒளிப்பரப்பாகி வருவதாகக் கூறப்படுகிறது.இதேபோன்று, எம்.பி. பத்மகுமார் இயக்கத்தில் உருவான “டோக்கன் நம்பர்” என்ற திரைப்படத்தில் வரும் ஜானகி எனும் கதாபாத்திரத்தின் பெயரானது, ஜெயந்தி என மாற்றப்பட்ட பின்னரே அந்தப் படத்தை வெளியிட அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *