பாகிஸ்தான் நடிகை நடித்ததால் தடைசெய்யப்பட்ட பஞ்சாபி திரைப்படம்

பாகிஸ்தான் நடிகை நடித்ததால் தடைசெய்யப்பட்ட பஞ்சாபி திரைப்படம்


அமர் ஹுண்டல் இயக்கிய இந்தப் படத்தில் பஞ்சாபி நடிகர் தில்ஜித் தோசன்ஜ் நடித்துள்ளார். இவரது அமர் சிங் சம்கீலா படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. சர்தார் ஜி 3 படத்தில் நடிகைகள் நீரு பஜ்வா, ஜாஸ்மின் பஜ்வா, ஹனியா ஆமிர் நடித்துள்ளார்கள். இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹனியா ஆமீர் இந்தியா, பாகிஸ்தான் போரின்போது ஆபரேஷன் சிந்தூரை இழிவுப்படுத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஏற்கெனவே, பாகிஸ்தான் பிரபலங்களின் இன்ஸ்டா பக்கங்களை இந்தியாவில் இருந்து முடக்கியிருந்தார்கள். இருப்பினும் அவரது இந்தப் பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பதிவினால் இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கள் பாகிஸ்தான் நாட்டு கலைஞர்களை இந்திய சினிமாக்களில் நடிக்க தடை விதித்தது. சர்தார் ஜி 3 திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்க வேண்டியது. பாகிஸ்தான் நடிகை பேசியதால் அந்தப் படம் வெளிநாடுகளில் மட்டுமே திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் பேசுகையில், “அரசு இது குறித்து எதுவும் கூறவில்லை. ஆனால், மக்களின் மனம் புண்படுமென்பதால் நாங்கள் இந்தியாவில் ரிலீஸ் செய்யவில்லை. டிரைலரைக் கூட யூடியூபில் வெளிவிடவில்லை. நடிகை சிந்தித்து பேசியிருக்க வேண்டும். இதனால் எங்களுக்கு 40 சதவிகிதம் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.

.நடிகர் தில்ஜித் தோசன்ஜ், “நாங்கள் பிப்ரவரியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்தினோம். அப்போது, எந்தப் பிரச்னையும் இல்லை. வெளிநாடுகளில் படத்தை வெளியிட தயாரிப்பாளருக்கு உதவுகிறேன். ஹனியா ஆமிர் தொழில்முறையில் சிறப்பான நடிகை. நான் கூச்ச சுபாவம் கொண்டவன் என்பதால் யாருடனும் பெரிதாக கலந்து பேசுவதில்லை” என்றார். இந்தப் படத்தில் நடித்த நடிகை நீரு பஜ்வா தனது சமூக வலைதள பக்கங்களில் இந்தப் படத்தின் சம்பந்தப்பட்ட அனைத்து பதிவுகளையும் நீக்கியுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *