Hindi version title changed after heavy backlash

சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ”கூலி” தென்னிந்திய படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாகும். இப்படம் பாலிவுட் படமான ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த ”வார் 2” படத்துடம் மோத உள்ளது.
இதனால் வட இந்தியாவிலும் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. ”கூலி” படத்திற்கு இந்தியில் ”மஜதூர்” என்று பெயரிட்டிருந்தது. இருப்பினும், இந்த தலைப்பு பார்வையாளர்களிடமிருந்து விமர்சனங்களைத் தூண்டியது. தலைப்பு சாதாரணமாக இருப்பதாக பலர் கருதினர்.
இதனையடுத்து, ரசிகர்கள் படத்தின் தலைப்பை மாற்ற கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், அதனை ஏற்றுக்கொண்ட படக்குழு கூலி படத்தின் இந்தி தலைப்பை ‘கூலி தி பவர்ஹவுஸ்’ என்று மாற்றியுள்ளனர். ‘கூலி’ என்ற தலைப்பை இந்தியில் பயன்படுத்த முடியாது, ஏனெனில் அது அமிதாப் பச்சன் படத்தின் தலைப்பாகும்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில், நாகார்ஜுனா, அமீர் கான், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் மற்றும் சவுபின் ஷாஹிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைப்பாளர். இப்படம் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி திரைக்கு வருகிறது.