தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் ‘ஜன நாயகன்’ பட இயக்குநர்.. வேற லெவல் தகவல்

ஹெச்.வினோத்
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில் தற்போது தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது.
முதல் முறையாக ஹெச். வினோத் – விஜய் கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது. இதனால், படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
வேற லெவல் தகவல்
இந்நிலையில், இயக்குநர் எச்.வினோத் புதிய பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தை ‘மகளிர் மட்டும்’ படத்தின் பிரம்மா இயக்க உள்ளதாகவும், திரைக்கதையை வினோத் எழுத உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.