ஜீ தமிழின் அயலி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்… யார் தெரியுமா?

அயலி சீரியல்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் அயலி.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒளிபரப்பாகும் இந்த அயலி தொடர் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.
அபி நக்ஷத்ரா, அனுமோல், மதன், லிங்கா, சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ள இந்த தொடர் கடந்த ஜனவரி 26ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது.
புதிய என்ட்ரி
சீரியல் சமீபத்தில் தொடங்கப்பட்டு இப்போது தான் என்ன கதை, நடிகர்கள் யார் யார் என ரசிகர்கள் தெளிவாகியுள்ளனர்.
இந்த நிலையில் அயலி சீரியலில் நடிகர் ராம்ஜி, வர்மா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க களமிறங்க உள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.