போதைப்பொருள் வழக்கில் திடீர் திருப்பம்.. நடிகர் கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம் இதுதான்

போதைப்பொருள் வழக்கில் திடீர் திருப்பம்.. நடிகர் கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம் இதுதான்


போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து தற்போது நடிகர் கிருஷ்ணா சிக்கி இருக்கிறார்.

அவர் கடந்த சில தினங்களாக தலைமறைவாக இருந்ததாக போலீஸ் கூறிய நிலையில் இன்று அவரை பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அதில் அவர் அளித்த வாக்குமூலம் பற்றிய தகவல் வந்திருக்கிறது.

போதைப்பொருள் வழக்கில் திடீர் திருப்பம்.. நடிகர் கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம் இதுதான் | Actor Krishna Denies Using Drugs

கிருஷ்ணா வாக்குமூலம்

நடிகர் கிருஷ்ணா தான் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தவில்லை என முற்றிலுமாக மறுத்து இருக்கிறாராம்.


தனக்கு இரைப்பை அலர்ஜி இருக்கிறது என்றும் அதனால் போதை பொருள் பயன்படுத்த வாய்ப்பில்லை எனவும் அவர் கூறி இருக்கிறார். மேலும் இதயத்துடிப்பு அதிகமாக இருப்பதற்காகவும் சிகிச்சை எடுத்து வருகிறாராம். இருப்பினும் ஸ்ரீகாந்த் தனது நெருங்கிய நண்பர் தான் என்பதை அவர் மறுக்கவில்லை.

கிருஷ்ணா போதை பொருள் பயன்படுத்தி இருக்கிறாரா என்பதை அவரின் ரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்தால் தெரியவந்துவிடும், அதை தான் அடுத்து போலீஸ் செய்ய இருக்கின்றனர். 

போதைப்பொருள் வழக்கில் திடீர் திருப்பம்.. நடிகர் கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம் இதுதான் | Actor Krishna Denies Using Drugs


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *