பிரபல கிரிக்கெட் வீரருடன் காதலா?.. மனம் திறந்த ஈஷா குப்தா

பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையான ஈஷா குப்தா கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் காதலில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி வந்தது.
இது குறித்து நடிகை ஈஷா குப்தா அளித்த பேட்டியில், “2018-ம் ஆண்டு ஒரு விருந்து நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்தோம். பின்னர் நாங்கள் 2 மாதங்களாக பழகிக் கொண்டு இருந்தோம். ஆனால் டேட்டிங் செய்யவில்லை. நாங்கள் டேட்டிங் கட்டத்தை அடைவதற்கு முன்பே உறவு முடிந்து விட்டது. எனவே அது டேட்டிங் அல்ல. நாங்கள் போதுமான இணக்கத்தில் இல்லை என்பதை உணர்ந்தோம். இதையடுத்து அவர் என்னுடையவர் அல்ல என்பதை நான் உணர்ந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஹர்திக் பாண்டியா, நடிகை நடாஷா ஸ்டான் கோவிக்கை கடந்த 2020-ம் ஆண்டு காதல் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் இருக்கிறார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றனர்.