இத்தனை பிளாக் பஸ்டர் படங்களில் நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்க வேண்டியதா?.. இப்படி மிஸ் செய்துவிட்டாரே

ஸ்ரீகாந்த்
பரபரப்பின் உச்சமாக தமிழ் சினிமாவில் இப்போது நடிகர் ஸ்ரீகாந்த் கைதான விஷயம் தான் பேசப்படுகிறது.
போதைப் பொருள் பழக்கத்தால் அடிமையான ஸ்ரீகாந்த், தனக்கு எப்படி இந்த பழக்கம் வந்தது, என்ன செய்தார் என அனைத்தையும் போலீசாரிடம் கூறிவிட்டார்.
இவரைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப் பொருள் பழக்கத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது அவர் தலைமறைவாகியுள்ளார்.
மிஸ் செய்த படங்கள்
மக்களிடம் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட நடிகர் ஸ்ரீகாந்த் சினிமாவில் மிஸ் செய்த சில படங்கள் குறித்து காண்போம்.
ரோஜாக் கூட்டம் படம் மூலம் அறிமுகமானாலும் 12பி தான் அவர் ஹீரோவாக முதலில் நடித்துள்ளார். சில காரணங்களால் அந்த பட வாய்ப்பு கைகூடாமல் போக அதில் பின்னர் நடிகர் ஷயாம் நடித்துள்ளார்.
மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்திருக்கிறார்.
ஆயுத எழுத்து படத்தில் சித்தார்த் ரோலில் முதலில் நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பதாக இருந்தது, ஆனால் கைகூடவில்லை.
இப்படங்களை தாண்டி பாலாவின் நான் கடவுள், சசி இயக்கிய பிச்சைக்காரன், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி போன்ற பட வாய்ப்புகளையும் ஸ்ரீகாந்த் மிஸ் செய்திருக்கிறார்.